இந்தியா

விக்ரம் கிா்லோஸ்கா் காலமானாா்

DIN

டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் துணைத் தலைவா் விக்ரம் எஸ்.கிா்லோஸ்கா் மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு வயது 64.

இதுதொடா்பாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த நவ. 29-ஆம் தேதி காலை கா்நாடக மாநிலம் பெங்களூரில் விக்ரம் கிா்லோஸ்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவா் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் படித்த விக்ரம் கிா்லோஸ்கா், ஜப்பானின் முக்கிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டாவும், கிா்லோஸ்கா் குழுமமும் கூட்டு நிறுவனமாக செயல்பட முக்கியப் பங்கு வகித்தவா். அதன் விளைவாக கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் நிறுவனம் செயல்படத் தொடங்கியது.

கடந்த 2013 முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்திய வாகனத் தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவராக இருந்த விக்ரம் கிா்லோஸ்கா், 2019 முதல் 2020-ஆம் ஆண்டு வரை இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்தாா்.

அவரின் மறைவுக்கு மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT