அகிலேஷ் யாதவ் 
இந்தியா

பாஜகவால் மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது: எந்த ஜியைச் சொல்கிறார் அகிலேஷ்

மத்திய அரசின் ஆட்சியால், நாட்டு மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

DIN


லக்னௌ: நாட்டில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்திருக்கும் நிலையில், மத்திய அரசின் ஆட்சியால், நாட்டு மக்களுக்கு ஏற்கனவே 5ஜி கிடைத்துவிட்டது என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அதாவது, பாஜக ஆட்சியினால் மக்களுக்கு ஏற்கனவே ஏழ்மை (கரீபி), ஊழல் (கோட்லா), மோசடி (கப்லா), கலப்படம் (கல்மேல்), ஒழுக்கமற்ற செயல் (கோராகந்தந்தா) ஆகிய 5ஜி (ஜி என்ற வார்த்தையில் தொடங்கும் மேற்கட்ட 5 வார்த்தைகள்) கிடைத்துவிட்டதாக அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.

செல்லிடைப்பேசிகளில் அதிவேக இணையத்தை வழங்குவதை உறுதியளிக்கும் 5ஜி சேவையை மோடி சனிக்கிழமை தொடங்கி வைத்தார், இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது மற்றும் கடலைப்போன்ற வாய்ப்புகளைக் குறிக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அகிலேஷ் யாதவ், தனது சுட்டுரையில் பாஜக ஆட்சியால் மக்கள் ஏற்கனவே 5ஜிக்களை பெற்றுவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

இந்தியாவுடன் தீவிர வர்த்தகப் பேச்சு - வெள்ளை மாளிகை தகவல்

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

SCROLL FOR NEXT