இந்தியா

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரிச் சலுகை நீட்டிப்பு!

உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரிச் சலுகையை மார்ச் 2023 மார்ச் வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

DIN

உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரிச் சலுகையை மார்ச் 2023 மார்ச் வரை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் சமையல் எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதும், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

உலகளாவிய விலை வீழ்ச்சியால் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் உள்ளது. உலகளாவிய விலையின் வீழ்ச்சி மற்றும் இறக்குமதி வரி குறைப்பு ஆகியவற்றால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை கணிசமாக குறையக்கூடும்.

சுத்திகரிக்கப்படாத பாமாயில், ஆர்பிடி பாமாலின், ஆர்பிடி பாமாயில், சுத்திகரிக்கப்படாத சோயா பீன் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்  ஆகியவற்றின் மீது தற்போதுள்ள வரி விதிப்பு 2023 மார்ச் 31 வரை எந்தவித மாற்றமில்லாமல் நீடிக்கும்.

சுத்திகரிக்கப்படாத பாமாயில் வகைகள் சோயா பீன்ஸ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீதான இறக்குமதி தீர்வை தற்போது பூஜ்யமாக உள்ளது.  இருப்பினும், இந்த மூன்று வகையான சமையல் எண்ணெய்களுக்கு சுத்திகரிக்கப்படாத வகைகளுக்கான வேளாண் செஸ் மற்றும் சமூக நலத்திட்ட செஸ் 5.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT