முகப்பு
இந்தியா

இந்திய வான்வெளியில் ஈரான் பயணிகள் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்திய போர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:29 AM
இந்திய வான்வெளியில் ஈரான் பயணிகள் விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
பகிர்:


புது தில்லி: சீனாவுக்குச் சென்று கொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து இந்திய போர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றன.

இது குறித்து இந்திய விமானப் படையிலிருந்து வெளியாகியிருக்கும் தகவலில், இந்திய வான்வெளியில் மகான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உடனடியாக, ஈரான் பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பாக இந்திய ஜெட் விமானங்கள் பாதுகாப்பான இடைவெளியில் பறந்துச் சென்றன. 

அதுபோல, ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் விமான நிலையங்களில் அந்த விமானம் தரையிறங்கவும் அனுமதி வழங்கப்பட்டன. ஆனால், தனது பாதையை திருப்பிக் கொண்டு இந்த விமான நிலையங்களுக்கு வருவதற்கு விமானி மறுத்துவிட்டார்.

பிறகு, விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் விமானம் சீனாவுக்குப் பறக்க அனுமதிக்கப்பட்டது. இந்திய வான்வெளியில் பறந்து கொண்டிருந்த போது முழுக்க முழுக்க ஈரான் விமானம் கண்காணிப்பில் இருந்தது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →