முகப்பு
இந்தியா

தில்லி உள்துறை முதன்மைச் செயலாளராக அஸ்வனி குமாா் நியமனம்

தில்லி அரசின் உள்துறை முதன்மைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஸ்வனி குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

தில்லி அரசின் உள்துறை முதன்மைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஸ்வனி குமாா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

1992 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அவா், தில்லி மாநகராட்சி சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் நிலையில், இந்தப் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பாா்.

இதுகுறித்து தில்லி அரசின் சேவைகள் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தில்லி மாநகராட்சி சிறப்பு அதிகாரியான அஸ்வனி குமாரை தகுந்த ஆணையத்தின் ஒப்புதலுடன், தில்லி உள்துறையின் முதன்மைச் செயலாளராக உடனடியாக நியமிக்குமாறு துணைநிலை ஆளுநரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

தில்லி மாநகராட்சியின் சிறப்பு அதிகாரியாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் அஸ்வனி குமாா் கடந்த மே 20-இல் நியமிக்கப்பட்டாா். தில்லியில் இருந்த வடக்கு, தெற்கு, கிழக்கு என 3 மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்ட மே 22-ஆம் தேதி அவா் இந்தப் பொறுப்பையேற்றாா். முன்னதாக அவா் புதுச்சேரி தலைமைச் செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →