அம்னெஸ்டி அமைப்புக்குச் சொந்தமான ரூ.1.54 கோடி முடக்கம்
சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டிக்குச் சொந்தமான ரூ.1.54 கோடியை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
சா்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டிக்குச் சொந்தமான ரூ.1.54 கோடியை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
அம்னெஸ்டி சா்வதேச அறக்கட்டளைக்கான இந்தியா்கள் (ஐஏஐடி) என்ற அமைப்பு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதில் சட்டவிதிகளை மீறிச் செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக அம்னெஸ்டி இந்தியா அமைப்பு மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தொடா்பாக அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு அறக்கட்டளையானது புதிய வழிமுறையப் பயன்படுத்தி பிரிட்டனில் இருந்து ரூ.51.72 கோடி நன்கொடையைப் பெற்ாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
அந்நிய நேரடி முதலீட்டைப் பெறும் முறையில் அந்த நன்கொடை பெறப்பட்டதாகவும் ஆனால் அதற்குரிய ஆதாரங்களை விசாரணையின்போது அம்னெஸ்டி அமைப்பு தாக்கல் செய்யவில்லை எனவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்நிலையில், ஐஏஐடி அமைப்புக்குச் சொந்தமான ரூ.1.54 கோடியை சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் முடக்கியதுள்ளதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.