முகப்பு
இந்தியா

உத்தரகாசி பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 26ஆக உயர்வு

உத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
பகிர்:

உத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 61 போ் அடங்கிய குழு ஒன்று, அந்த மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்.

திரௌபதி கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.

இதில் 4 பேரின் உடல்கள் முதலில் மீட்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை மேலும் 12 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் இன்று மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பலியானோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மீட்கப்பட்ட 26 சடலங்களில் 24 பயிற்சியாளர்களின் சடலங்கள் என்றும், மற்ற இரண்டு பயிற்றுநர்களின் சடலங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அத்துடன் விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பனிச்சரிவில் சிக்கிய 61 பேரில் 30 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →