இந்தியா

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி மோதியதில் 11 பேர் பலி; 20க்கும் மேற்பட்டோர் காயம்

DIN

மகாராஷ்டிரத்தில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் பலியாகினர். 

நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து ஒன்று லாரி மோதி விபத்திற்கு உள்ளானது இதில் 11 பேர் பலியாகினர்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரத்தில் ஒளரங்காபாத் சாலையில் சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று, லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது.  

இதனால் பேருந்தில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் திணறினர். பின்னர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் வந்து தீயை அணைத்து பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 11 பயணிகள் தீயில் சிக்கி பலியாகினர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT