இந்தியா

கொச்சியில் ரூ.1,200 கோடி ஹெராயின் பறிமுதல்: 6 ஈரானியர்கள் கைது

DIN

கொச்சி கடற்பகுதியில் ரூ.1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் சமீபகாலமாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய கடற்பரப்பு பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி கொச்சி கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான ஈரானிய மீன்பிடிப் படகை மடக்கி இந்திய கடற்படை மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். 

சோதனையில் 200 கிலோ அளவிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1,200 கோடியாகும். இதுதொடர்பாக 6 ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரும் ஈரானின் கொனாரக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடமிருந்து 3 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கொச்சிக்கு அழைத்து வந்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் வழியாக ஹெராயினை கொண்டுவந்து நடுக்கடலில் ஈரான் படகில் மாற்றியபோது அவர்கள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT