இந்தியா

மழையால் ஏற்கனவே மிதக்கும் மும்பைக்கு மேலும் மஞ்சள் எச்சரிக்கை

PTI


மும்பை: வெள்ளிக்கிழமை பெய்த கனமழை காரணமாக மும்பையின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியிருக்கும் நிலையில்  மும்பை மட்டுமல்லாமல் தாணே, பல்கார் மற்றும் கொங்கன் பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை செய்தியில், மும்பையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பரவலாகப் பெய்யும். மழையின் போது மணிக்கு சுமார் 30 - 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மாநகரம் முழுவதும் பரவலாக மேகக் கூட்டங்களால் சூழப்பட்டுள்ளது. மதியத்துக்குப் பிறகு பரவலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எனினும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளுக்கு பாதிப்பில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT