இந்தியா

சண்டீகரில் இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா

DIN

சண்டீகரில் இந்திய விமானப்படையின் 90-வது ஆண்டு விழா  நடந்து வருகிறது.

இந்திய விமானப்படை இன்று(சனிக்கிழமை) 90 ஆண்டுகளின் சிறப்பைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. பஞ்சாபின் சண்டீகரில் இசைக்குழு அணிவகுப்புடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி, விமானப்படை தலைவர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இந்திய விமானப் படைத் தலைவர் விவேக் ராம் சவுதாரி கூறுகையில், "எங்கள் முன்னோடிகளின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையால் பெறப்பட்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை நாங்கள் பெற்றுள்ளோம். விமானப்படையில் பணிபுரிந்த வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் உரிமை நமக்கு உள்ளது. விமானப்படையின் நூற்றாண்டு நிறைவு விழா இன்னும் பத்தாண்டுகளில் நடத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது".

"அக்னிபத் திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் விமானப்படை வீரர்களை சேர்ப்பது நம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. ஆனால் அதைவிட முக்கியமாக, இந்தியாவில் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கும், தேசத்தின் சேவையில் அவர்களை ஈடுபடுத்துவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

இதையும் படிக்க:

இந்திய விமானப்படை வீரர்களுக்கான சீருடையை மாற்றி விமானப்படைத் தலைவர் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT