இந்தியா

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம்: ரயில்வே அமைச்சர் விளக்கம்

DIN

பெங்களூரு-மைசூரு இடையேயான திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்றயமைத்ததற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
 
1980ஆம் ஆண்டு பெங்களூரு-மைசூரு இடையே அதிவேக விரைவு திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது அறிமுகப்படுத்தப்பட்டது. 139 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயில் சென்றடையும். 

இந்நிலையில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்பிரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்தது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் திப்புவின் பங்களிப்பை மழுங்கடிக்கும் முயற்சி என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மத்திய ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. 

மைசூரை ஆண்ட உடையார் மன்னர் ரயில்வே துறை கட்டமைப்பிற்கு வழங்கிய உதவியை கெளரவிக்கும் விதமாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இதில் அரசியல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT