இந்தியா

காஷ்மீருக்கு கட்டாயம் செல்லுங்கள்! சுற்றுலா பயணிக்கு மோடி கொடுத்த பதில்!

காஷ்மீருக்குச் சென்று வந்த சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார்.

DIN


காஷ்மீருக்குச் சென்று வந்த சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளார். மேலும், சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவு உணர்வுப்பூர்வமாக தன்னை வசீகரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ரஞ்சித் குமார் எனும் சுற்றுலா பயணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் சென்று வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் அவர் எடுத்த படங்களை சுட்டுரையில் பகிந்துள்ளார். 

படங்களுடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த மாதம் காஷ்மீர் பயணம் சென்று வந்தேன். முன்பு மாணவனாக இருந்தபோது சென்றபோது இந்த அதே அழலு 45 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படியே உள்ளது. பைசரான், ஆரு, கோகர்நாக், அச்பால், குல்மார்க், ஸ்ரீநகர் மிகவும் அழகான பகுதிகள். தால் ஏரியருகே சினார் வகை பழமையான மரம் உள்ளது. மக்களுக்கு அதன்மீது தனி ஈர்ப்பு உள்ளது எனப் பதிவிட்டுள்ளார். 

இதனைப் பிரதமர் நரேந்திர மோடி மறுபகிர்வு (Retweet) செய்துள்ளார். அற்புதம், ஸ்ரீநகரில் கடந்த 2019ஆம் ஆண்டு சென்ற பயணத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர இந்தப் பதிவு தூண்டுகிறது எனப் பதிவிட்டுள்ளார். 

சுற்றுலா பயணியின் நெகிழ்ச்சியான சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து ஷேர் செய்தது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூற்றுக்கு நூறு அவ... ரேவதி சர்மா!

அபூர்வம்...

ஆரோவில் உருவானது எப்படி?

முதல்நாளில் ரூ.13 கோடி, 2-ஆம் நாளில் ரூ.50 கோடி! வசூலில் முன்னேறும் மதராஸி!

லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

SCROLL FOR NEXT