இந்தியா

அமெரிக்காவுக்கு நிகராக உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

DIN

அமெரிக்காவுக்கு நிகராக உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது, 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உ.பி.யில் சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுக்கு நிகராக உருவாக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு உறுதியளித்துள்ளேன். 

மேலும் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் உத்தரப் பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூ. 8,000 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று அறிவிக்கிறேன். நல்ல சாலைகள் அமைப்பதற்கு மத்திய அரசிடம் நிதிப் பற்றாக்குறை இல்லை. 

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவதற்கு, சாலை கட்டமைப்புகள் மிக முக்கியமானது என்று இவ்வாறு கட்கரி குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT