(படம்: ட்விட்டர்|பன்வர் லால் சர்மா) 
இந்தியா

ராஜஸ்தான்: காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா காலமானார்

உடல்நலக் குறைவு காரணமாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா இன்று காலமானார். 

DIN

உடல்நலக் குறைவு காரணமாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர் லால் சர்மா இன்று காலமானார். 

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான பன்வர் லால் சர்மாவுக்கு நேற்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள  எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 77. பன்வர் லால் சர்மாவின் உடல் அனுமன் நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை பிற்பகல் சர்தர்ஷாஹரில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த பன்வர் லால் சர்மா ஏப்ரல் 17, 1945 இல், ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் உள்ள சர்தர்ஷாஹரின் ஜெய்த்சிசர் கிராமத்தில் பிறந்தார். சர்மா தனது 17வது வயதில் அரசியலில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதினுக்கு பகவத் கீதை அன்பளிப்பு! பிரதமர் மோடி சநாதன தர்மத்தின் தூதர்: கங்கனா ரணாவத் பேச்சு!

தமிழகத்தில் 98.23% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.89.94 ஆக நிறைவு!

திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜகவும் அதன் கூட்டணியும் முயற்சி! கனிமொழி

ஜப்பானில் பாகுபலி: தி எபிக் சிறப்பு காட்சியில் பிரபாஸ்!

SCROLL FOR NEXT