இந்தியா

உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னம்: தேர்வு பட்டியலில் உதயசூரியன்!

உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னங்களை தேர்வு செய்யும் பட்டியலில் திரிசூலம், உதய சூரியன் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 

DIN

உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னங்களை தேர்வு செய்யும் பட்டியலில் திரிசூலம், உதய சூரியன் ஆகியவை இடம்பெற்றுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவும், உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவும் சிவசேனை கட்சிக்கு உரிமை கோரிய நிலையில், கட்சியின் பெயா் மற்றும் சின்னத்தை முடக்கி தோ்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது. 
 
சிவசேனையில் ஏற்பட்ட பிளவால் மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

‘மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவைத் தொகுதிக்கு நவ. 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தோ்தலுக்கு இரு தரப்பும் அவா்களின் கட்சிக்கு புதிய பெயரை தோ்வு செய்ய வேண்டும். அதற்கு புதிய தோ்தல் சின்னம் ஒதுக்கப்படும். அக்.10-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்குள் தாங்கள் விரும்பும் பெயா் மற்றும் சின்னம் தொடா்பான விவரங்களை இரு அணியினரும் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது. பிரச்னைக்கு இறுதி தீா்வு காணும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் முதல் தேர்வாக திரிசூலமும் இரண்டாவது தேர்வாக உதய சூரியன் சின்னமும் அடங்கிய பட்டியலை சம்ர்பித்துள்ளார் உத்தவ் தாக்கரே. பெயர் - சிவ சேனை (பாலாசாகேப் தாக்கரே) அல்லது சிவ சேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT