முகப்பு
இந்தியா

உத்தரகாசி பனிச்சரிவு: பலி எண்ணிக்கை 27ஆனது

உத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

உத்தரகாசி பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனத்தைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் மற்றும் பயிற்றுநா்கள் என 61 போ் அடங்கிய குழு ஒன்று, அந்த மாவட்டத்தில் உள்ள திரெளபதி மலையில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். திரௌபதி கா தண்டா-2 சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடி உயரத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. 

சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக்கொண்டிருந்த இக்குழுவினா் பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனா்.

இதில் செவ்வாய்க்கிழமை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை 15 பேரின் உடல்களும் வெள்ளிக்கிழமை 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 24 பயிற்சியாளர்கள், 2 பயிற்றுநர்கள் என 26 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் காணாமல் போன 3 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்த நிலையில் மேலும் ஒருவரது உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இதைத்தொடரந்து பனிச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் பனிச்சரிவில் சிக்கிய எஞ்சிய 2 பேரை தேடும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.