முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

Updated On : 10 அக்டோபர், 2022 at 2:33 PM
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் அனந்த்நாக் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 லஷ்கர் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

காஷ்மீர் மண்டல காவல்துறையின் கூற்றுப்படி, கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்தவர்கள் மற்றும் பல பயங்கரவாத குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் காஷ்மீர் மண்டல காவல்துறை ட்வீட் செய்துள்ளது.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் உள்ள டாங்பாவா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.