முகப்பு
இந்தியா

முலாயம் சிங் இறுதிச் சடங்கில் பங்கேற்கிறார் கே.சந்திரசேகர் ராவ்

நாளை நடைபெறும் முலாயம் சிங் இறுதிச் சடங்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்க உள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:32 AM
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
பகிர்:

நாளை நடைபெறும் முலாயம் சிங் இறுதிச் சடங்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்க உள்ளார். 

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 82. ஹரியாணா மாநிலம் குருகிராம் மருத்துவமனையில் உயிரிழந்த முலாயம் சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான சைஃபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது. 

அங்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசியல் கட்சித் தலைவர்கள், சமாஜவாதி தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு சொந்த கிராமத்திலேயே அரசின் முழு மரியாதை அளிக்கப்பட்டு, அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நாளை நடைபெறும் முலாயம் சிங் இறுதிச் சடங்கில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்க உள்ளார்.

இதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் புறப்பட்டு செல்லும் அவர் நாளை பிற்பகல் யாதவின் சொந்த கிராமமான சைஃபாய் சென்றடைவார் என்று தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முலாயம் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவுள்ளதால் சைஃபாய் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →