இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரின் கைப்பேசி திருட்டு: இளைஞர் கைது!

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமால் ஷிண்டேவின் கைப்பேசியைத் திருடியதாகக் கூறி கைது செய்யப்பட்ட நபர் அக்.6-ம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 

DIN


மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமால் ஷிண்டேவின் கைப்பேசியைத் திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மூத்த காங்கிரஸ் தலைவர் சுஷில் குமார் ஷிண்டே மும்பைக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​அவரது கைப்பேசியை கௌரவ் என்றவர் திருடியதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் ஷிண்டே தாதர் ஸ்டேஷனை அடைவதற்கு முன்பு தனது கைபேசியை இருக்கையில் வைத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கைபேசியை ஒருவர் திருடியுள்ளார். 

இதையடுத்து, ஷிண்டேவின் மகள் குற்றவாளியை கையும் களவுமாகப் பிடித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் மந்தர் பிரமோத் கௌரவ் என அடையாளம் காணப்பட்டு, அரசு ரயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்டு, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

சோலாப்பூரில் வசிக்கும் கௌரவ், முன்னாள் முதல்வர் பயணம் செய்த அதே பெட்டியில் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி... சோனியா பன்சால்!

இரட்டை குணம் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள்!

பிக் பாஸ் 9: சுபிக்‌ஷாவுக்கு தவெகவினரின் ஆதரவு அதிகரிப்பது ஏன்?

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT