முலாயம் சிங் யாதவ்(கோப்புப்படம்) 
இந்தியா

முலாயம் சிங் யாதவுக்கு நாளை இறுதிச் சடங்கு

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடலுக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று திங்கள்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 82.

ஹரியாணா மாநிலம் குருகிராம் மருத்துவமனையில் உயிரிழந்த முலாயம் சிங்கின் உடல், அவரது சொந்த ஊரான சைஃபாய் பகுதியில் உள்ள கிராமத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.

அங்கு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசியல் கட்சித் தலைவர்கள், சமாஜவாதி தொண்டர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு சொந்த கிராமத்திலேயே அரசின் முழு மரியாதை அளிக்கப்பட்டு, அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

மேலும், முலாயம் சிங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வரவுள்ளதால் சைஃபாய் பகுதி முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடி இந்தியாவின் விற்பனை 18% சரிவு!

இஸ்ரேல் அரசு நிகழ்ச்சியில் இந்திய தேசிய கீதம்! விடியோ வைரல்!

வெள்ளை மனம்... மேகா!

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

SCROLL FOR NEXT