கோப்புப் படம் 
இந்தியா

கால்பந்து திடலில் தாக்கிய மின்னல்! 2 பேர் பலி; 21 பேர் படுகாயம்

ஒடிசாவில் கால்பந்து விளையாட்டின்போது திடலில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர். 

DIN

ஒடிசாவில் கால்பந்து விளையாட்டின்போது திடலில் மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயமடைந்தனர். 

ஒடிசா மாநிலம் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ளூர் அளவிலான கால்பந்தாட்டம் நடைபெற்றது. கால்பந்தாட்டத்தின்போத் திடலைச் சுற்றிலும் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர்.

அப்போது கருமேகங்கள் சூழ்ந்திருந்த வானத்திலிருந்து திடீரென மின்னல் தாக்கியது. இதில் கால்பந்தாட்ட வீரர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பார்வையாளர்கள் உள்பட 21 பேர் படுகாயமடைந்தனர். 

படுகாயம் அடைந்தவர்கள் அருகிலிருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் 17 பேர் மிகுந்த காயமடைந்ததால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT