இந்தியா

முலாயம் சிங் யாதவின் உடல் தகனம்!

DIN

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. 

உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள முலாயம் சிங்கின் சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரின் உடல், நுமாய்ஷ் மைதானத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதைக்கு பின் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் கமல் நாத், பாபா ராம்தேவ், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், சமாஜவாதி எம்.பி. ஜெயா பச்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திமுக சார்பாக பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு மற்றும் இளைஞரணி செயலாரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவா் ராஜீவ் சுக்லா, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் கே.சி.தியாகி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அகிலேஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனா்.

பின்னர், முலாயம் சிங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான சைஃபயி-க்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள நுமாய்ஷ் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திரப் பிரதேசம் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் முலாயம் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT