தெரு நாய்களிடமிருந்து காட்டு மானைக் காப்பாற்றிய தேநீர் வியாபாரி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தெருநாய்கள் கூட்டத்தால் தாக்கப்படாமல் காட்டு மானை தேநீர் விற்பனையாளர் ஒருவர் காப்பாற்றியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கதுவா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் தெருநாய்களால் தாக்கப்படாமல் காட்டு மானை தேநீர் விற்பனையாளர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
அதிகாலையில் கைலாஷ் குமார் தனது டீக்கடையைத் திறக்கச் சென்று கொண்டிருந்தபோது, ஷஹீதி சௌக் அருகே, மான் ஒன்று நாய்களால் தாக்கப்படுவதைக் கவனித்துள்ளார். உடனடியாக அவர் வனத் துறையினருக்கு தகவல் அளிப்பதை விடுத்து நாய்களை துரத்திச் சென்று காயமடைந்த மானை மீட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து, விரைந்து வந்த அதிகாரிகள், மானை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு மீட்டுச்சென்றனர். சிகிச்சை முடிந்த பிறகு மான் வனப்பகுதியில் விடப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Advertisement