2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
2 பெண்களுக்கும் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்றது விசாரணையில் வெளிவந்துள்ளது. நரபலி கொடுக்க 2 பெண்களின் கை, கால்களையும் கட்டி கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டுள்ளது.
நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை வெட்டி புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் ரத்தத்தை வீடுகளில் தெளித்ததாக பகவல் சிங் - லைலா தம்பதியினர் அதிர்ச்சி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.
மேலும், நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் மாமிசத்தை உண்டதாகவும் பகவல் சிங் - லைலா தம்பதியினர் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பகவல் சிங் - லைலா தம்பதியினர் மற்றும் மந்திரவாதி சஃபிக்கு அக்டோபர் 26 வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 3 பேரையும் அக்டோபர் 26 வரை சிறையில் அடைக்க எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான மந்திரவாதி சஃபி 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர். 75 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் மந்திரவாதி சஃபி செய்யப்பட்டார்.
இதையும் படிக்க: போனஸ் கொடுக்காத கடை முன் குப்பை கொட்டிய தூய்மைப் பணியாளர்!
தொடர்ந்து குற்றச் செயல்களில் மந்திரவாதி ஈடுபட்டுவந்ததால் மேலும் சிலரை அவர் நரபலி கொடுத்துள்ளாரா என காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.