20ஆம் நூற்றாண்டில் கூட முந்தைய அரசுகள் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவில்லை: பிரதமர் மோடி
முந்தைய அரசுகள் 20ஆம் நூற்றாண்டில் உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசதிகளை இந்தியர்களுக்கு ஏற்படுத்தித் தரவில்லை பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
முந்தைய அரசுகள் 20ஆம் நூற்றாண்டில் உலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசதிகளை இந்தியர்களுக்கு ஏற்படுத்தித் தரவில்லை பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டில் 4ஆவது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்துப் பின்னர் இந்திரா காந்தி மைதானத்தில் பொது மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார். அதேபோல ஹிமாசலின் உனாவில் மருந்துப் பூங்கா மற்றும் புதிய ஐஐடி-க்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார்.
இதையும் படிக்க: சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட 3வது பாடல் ப்ரமோ இதோ
பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ நாங்கள் 20ஆம் நூற்றாண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டுகளுக்குத் தேவையான வசதிகளை மக்களுக்கு வழங்கி வருகிறோம். கடந்த காலங்களில் இருந்த சவால்களை எல்லாம் தற்போதுள்ள புதிய இந்தியா நீக்கி மக்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. வேகமாக வளர்ச்சியடைந்தும் வருகிறது. முன்னதாக மத்தியில் ஆட்சியில் இருந்த அரசுகள் மக்களுக்கானத் தேவையை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துவிட்டன.
எனது அரசாங்கம் மக்களின் தேவைகளை சிறப்பாக நிறைவேற்றி வருவது மட்டுமில்லாமல் அதனை முழு பலத்துடன் செயல்படுத்தி வருகிறது. உனாவில் ரயில்வே, கல்வி, மருத்துவம் தொடர்பான திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தீபாவளிக்கு முன்னதாக கோடிக்கணக்கான செலவில் தயாராகும் திட்டங்களை ஹிமாசலப் பிரதேச மக்களுக்கு பரிசாக அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.