முகப்பு
இந்தியா

ஹிஜாப் வழக்கு: இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
உச்சநீதிமன்றம்
பகிர்:

கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது தொடா்பான வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப். 5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாநில உயா்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம், வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்து கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது.

Advertisement

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் சிலா் மனு தாக்கல் செய்தனா். அவா்களின் மனுக்கள் மீதான வாதப் பிரதிவாதங்கள் 10 நாள்கள் நடைபெற்ற நிலையில், செப்டம்பா் 22-ஆம் தேதி தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு இன்று வெளியிட்டனர்.

நீதிபதி ஹேமந்த் குப்தா ஹிஜாப்புக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தடை செல்லும் என்றும், நீதிபதி சுதான்ஷு தூலியா தடை செல்லாது என்றும் இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது எனக் கூறிய நீதிபதி சுதான்ஷு தூலியா பேசுகையில், ஹிஜாப் அணிவது தனிப்பட்ட விருப்பமே தவிர வேறு எதுவும் இல்லை. மாணவிகளுக்கு கல்வி அளிப்பதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் இரு வேறு தீர்ப்புகள் வழங்கியுள்ளதால், இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி ஹேமந்த் குப்தா நாளையுடன் ஓய்வு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments