உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார்.  
இந்தியா

4-ஆவது ‘வந்தே பாரத்’ ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

DIN

ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.

நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடியது. இந்த ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

வந்தே பாரத் விரைவு ரயிலின் 3-ஆவது ரயில் சேவையை குஜராத்தின் காந்தி நகருக்கும் மகாராஷ்டிரத்தின் மும்பைக்கும் இடையே கடந்த மாதம் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

இந்நிலையில், 4-ஆவது ரயில் சேவையை ஹிமாசல பிரதேச மாநிலம் உனா ரயில் நிலையத்தில் இருந்து தில்லி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கிவைத்தார். 

இந்நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆக்கியோர் கலந்துகொண்டனர். 

வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கிவைக்கப்பட்டுள்ள குஜாரத், ஹிமாசல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்கள் நிகழாண்டு இறுதியில் சட்டபேரவைத் தோ்தலை சந்திக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

SCROLL FOR NEXT