குஜராத், இமாசலில் தேர்தல் எப்போது? இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
குஜராத் மற்றும் இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கவிருக்கிறது.
புது தில்லி: குஜராத் மற்றும் இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கவிருக்கிறது.
புது தில்லியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு, செய்தியாளர்கள் சந்திப்பின்போது, குஜராத் மற்றும் இமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. கேரள நரபலி: தம்பதி பற்றிய அதிர்ச்சித் தகவலைச் சொல்லும் அண்டைவீட்டார்
Advertisement
குஜராத், இமாசலப்பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது.
முன்னதாக, இவ்விரு மாநிலங்களிலும் ஏற்கனவே தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று இமாசலில் தனது சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி நிறைவு செய்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.