இந்தியா

தில்லி கலால் கொள்கை: 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

DIN

தில்லி கலால் கொள்கை தொடர்பாக 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

தில்லியில் மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றது. 

இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இன்று காலை மீண்டும் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது. 

முன்னதாக, அக்டோபர் 7 ஆம் தேதி, பஞ்சாப், தில்லி மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக தேசிய தலைநகரில் ஒரு தொழிலதிபர் வீட்டிலிருந்து ரூ.1 கோடி கைப்பற்றப்பட்டது.

தற்போது, பணமோசடியில் பணப் பரிவர்த்தனையைத் தடுக்க ஆவணப்படம் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத் துறை சேகரித்து வருவதோடு, இந்த விவகாரம் குறித்துத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT