புது தில்லி: எளிமையான மக்களுக்கும் நீதி சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, திறமையான நாட்டுக்கும் வளர்ச்சியடைந்த சமுதாயத்துக்கும் உணர்வுப்பூர்வமான நீதி அமைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து சட்டத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற காணொலி காட்சி வாயிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா போன்ற வளர்ந்த நாட்டில், ஆரோக்கியமன மற்றும் நம்பிக்கைக் கொண்ட சமூகத்துக்கு, நம்பகமான மற்றும் விரைவான நீதி அமைப்பு கட்டாயம் தேவை என்றும் மோடி கூறினார்.
நீதி அமைப்பு மற்றும் பல்வேறு நடைமுறைகளும், ஒவ்வொரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, கால நேரத்துக்குத் தக்க வகையில் மேம்பாடு அடைய வேண்டும்.
நீதி வழங்கும்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கை பலப்பட வேண்டும். இது நாட்டில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து மேம்பட மிகவும் அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.