இந்தியா

ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி

கர்நாடகத்தில் ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

DIN

கர்நாடகத்தில் ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க அந்த மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

வாடகை ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு ஓலா, உபொ் போன்ற கைப்பேசி செயலி வழி வாகன சேவை நிறுவனங்களுக்கு கா்நாடக போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

மேலும், கர்நாடக அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட அந்நிறுவனங்களின் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் போக்குவரத்துத் துறையின் இந்த உத்தரவுக்கு எதிராக ஓலா, உபொ் நிறுவனங்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.

இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஓலா, உபொ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கும் வரை அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதன் மூலமாக ஓலா, உபொ் நிறுவனங்கள் ஆட்டோ சேவைகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. 

மேலும், கட்டணம் குறித்து கர்நாடக அரசு முடிவெடுக்கும் வரை, அரசு நிர்ணயித்த தொகையைவிட 10 சதவீதம் கூடுதலாக கட்டணம் நிர்ணயித்து கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT