இந்தியா

காங்கிரஸின் ஊழலை முறியடித்த ஆம் ஆத்மி: ஜெ.பி.நட்டா

தில்லியில் காங்கிரஸின் ஊழலை ஆம் ஆத்மி முறியடித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

தில்லியில் காங்கிரஸின் ஊழலை ஆம் ஆத்மி முறியடித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

தில்லியில் ராம் லீலா மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற “ பஞ்ச் பர்மேஸ்வர் சம்மேளன்” என்ற நிகழ்வில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அந்த நிகழ்வில் ஜெ.பி.நட்டா பேசியதாவது: பாஜக நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மியைத் தோற்கடிக்கும். அதன்பின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தோற்கடிக்கும். ஆம் ஆத்மி ஊழலின் கட்சியாக மாறியுள்ளது. இதற்கு முன்னதாக காங்கிரஸ் செய்த ஊழல்கள் அனைத்தையும் ஆத் ஆத்மி முறியடித்துள்ளது. நேர்மையான அரசினை தில்லியில் உருவாக்குவதாக கூறிவிட்டு ஆம் ஆத்மி ஊழலில் ஈடுபட்டு வருகிறது. பேருந்துகள் வாங்குவது முதல் சுகாதாரமான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி தருவது முதலான விஷயங்களில் ஆம் ஆத்மி அனைத்து திட்டங்களிலும் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததும் தில்லியில் மதுக்கடைகள் மூடப்படும் என அரவிந்த் கேஜரிவால் கூறியிருந்தார். ஆனால், ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்த பிறகு தில்லியின் அனைத்துப் பகுதியிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT