இந்தியா

அமலாக்கத் துறை சுதந்திரமானது; பழிவாங்க அல்ல: நிர்மலா சீதாராமன்

DIN

அமலாக்கத் துறை முழு சுதந்திரத்துடன் செயல்படுவதாகவும், பழிவாங்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டன்னில் நடைபெற்ற உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மாநாட்டில் கலந்துகொண்டார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமலாக்கத் துறை செயல்பாடுகள் மக்களையும் தனியார் நிறுவனங்களையும் அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 

அபோது பேசிய அவர், அமலாக்கத் துறை தனது செயல்பாடுகளில் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகிறது. மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும், குற்றம் முதலில் மாநில அல்லது மற்ற அமைப்புகளால் கண்டறியப்படுகிறது. அதன் பின்னர் தான் அந்த விசாரணை வளையத்திற்குள் அமலாக்கத்துறை செல்கிறது.

அமலாக்கத் துறை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுவதில்லை. சில விவகாரங்களில் அடிப்படை ஆதாரங்களைக்கொண்டு அமலாக்கத் துறை விசாரணை செய்யும் போது தனிப்பட்ட செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வருகின்றன எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT