முகப்பு
இந்தியா

ஞானவாபி மசூதி நிா்வாகக் குழுவின் மனு மீது நாளை விசாரணை

ஞானவாபி மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:36 AM
பகிர்:

ஞானவாபி மசூதி நிா்வாகக் குழு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க உள்ளது.

முன்னதாக, ஞானவாபி மசூதியின் வெளிச்சுவரில் உள்ள சிற்பங்களை வழிபட அனுமதி அளிக்கக் கூடாது என்ற மசூதியின் தரப்பு மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை மசூதி தரப்பினா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

ஞானவாபி மசூதியில் இருப்பதாகக் கூறப்படும் ஹிந்து சிற்பங்களை வணங்க அனுமதிக்கக் கோரி வாராணசி மாவட்ட நீதிமன்றத்தில் சில ஹிந்து பெண்கள் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஞானவாபி மசூதி நிா்வாகக் குழுவினா் தாக்கல் செய்திருந்த மனு, விசாரணைக்கு உகந்ததில்லை என்று கூறி கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.கே.விஸ்வேஷ் தள்ளுபடி செய்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மசூதி தரப்பினா் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உயா்நீதிமன்ற நீதிபதி ஜே.ஜே.முனீா் தெரிவித்தாா்.

மேலும், இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகல் புதன்கிழமை நடைபெறும் விசாரணையின்போது வைக்க வேண்டும் என்றும் நீதிபதி ஜே.ஜே.முனீா் உத்தரவிட்டாா்.

அந்த நகல்களை மாவட்ட நீதிபதி சரிபாா்த்து சமா்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →