இந்தியா

இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய்!

இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ. 2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

DIN

 
இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ. 2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட ரயில்வே 28 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், 2022-23 ஆம் ஆண்டில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஸ்கிராப் பொருட்களை திரட்டி, மின்-ஏலம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

ஆத்மார்த்தம்... நிவேதா தாமஸ்!

அசத்தும் சாம் கரண்! சிஎஸ்கே வாழ்த்து!

ஜம்முவில் ஆக.30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

சிவாஜி படத்தில் நடிக்காதது ஏன்? சத்யராஜ் விளக்கம்!

SCROLL FOR NEXT