இந்தியா

பஞ்சாப்: பாகிஸ்தான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது4 நாள்களில் மூன்றாவது சம்பவம்

பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) சுட்டு வீழ்த்தப்பட்டது. பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அத்துமீறி ஊடுருவதும்,

DIN

பஞ்சாப் மாநில எல்லையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) சுட்டு வீழ்த்தப்பட்டது. பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அத்துமீறி ஊடுருவதும், அவை சுட்டு வீழ்த்தப்படுவதும் கடந்த 4 நாள்களில் இது மூன்றாவது சம்பவம் ஆகும்.

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் வழியாக ட்ரோன் மூலம் போதைப் பொருள்களைக் கடத்துவது அதிகம் நடைபெறுகிறது. இது தவிர பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களும் ட்ரோன் மூலம் வீசப்படுகின்றன.

இந்நிலையில் அமிருதசரஸ் எல்லையை ஒட்டிய சன்னா கிராமத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் ட்ரோன் ஒன்று பாகிஸ்தான் பகுதியில் இருந்து பறந்து வந்தது. அதன் ஒசையைக் கேட்ட எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்), அதனைப் பின் தொடா்ந்து சென்று சுட்டு வீழ்த்தினா். அதில் 2.5 கிலோ எடையுள்ள போதைப் பொருள் இருந்தது. அது என்ன வகையான போதைப்பொருள் என்பதைக் கண்டறிவதற்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு முன்பு பஞ்சாப் எல்லையில் கடந்த 13,14 மற்றும் 16-ஆம் தேதிகளிலும் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் அத்துமீறி பறந்தன. அவற்றையும் பிஎஸ்எஃப் வீரா்கள் சுட்டு வீழ்த்திவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT