இந்தியா

ஹிமாசல் தேர்தல்: முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேட்புமனு தாக்கல்!

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 

DIN

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 

ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17-ல் தொடங்கி அக்டோபர் 25-ல் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 29 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலையொட்டி கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், செராஜ் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது பாஜக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT