இந்தியா

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த திங்கள் கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

அதில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகளும், சசி தரூர் 1,072 
வாக்குகளும்  பெற்றிருந்தனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மல்லிஜார்ஜுன கார்கேவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். அவரின் எதிர்காலம் இனிமையானதாக அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT