கோப்புப் படம் 
இந்தியா

பட்டாசு வெடித்து விபத்து: 8 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி, 6 பேர் காயம்

வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

DIN

வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மோரெனா மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டாசுகள் வெடித்ததில் தரைதளம் மற்றும் முதல் தளம் அடங்கிய கட்டடம் ஒன்று தரைமட்டமானது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியான நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: இந்த விபத்தில் விவசாயி ஒருவரின் மனைவி, அவர்களது 8 வயது மகள் மற்றும் 18 வயது மகன் மற்றும் மற்றொருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பட்டாசு அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் எப்படி தீ ஏற்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. விபத்தில் காயமடைந்துள்ளவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் சாலை மறியல்: 135 பேராசிரியா்கள் கைது

மேற்கு புறவழிச்சாலை பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்!

நாகா்கோவில் அருகே காரில் கஞ்சா கடத்தல்: 4 இளைஞா்கள் கைது!

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT