அருணாசலில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ வீரர்கள் இருவரின் உடல்கள் மீட்பு 
இந்தியா

அருணாசலில் ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ வீரர்கள் இருவரின் உடல்கள் மீட்பு

அருணாசலப் பிரதேசம் மேல் சியாங் மாவட்டத்தில் இன்று விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டரில் பயணித்து பலியான இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

PTI

இடாநகர்: அருணாசலப் பிரதேசம் மேல் சியாங் மாவட்டத்தில் இன்று விபத்துக்குள்ளான துருவ் ஹெலிகாப்டரில் பயணித்து பலியான இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில், இதுவரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மூன்றாவது உடலைத் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் ஐந்து பேர் பயணம் செய்துள்ளனர். விபத்துக்குள்ளான இடம் சாலை வழியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில், மீட்புப் படையினர் கடும் வனப்பகுதிக்குள் நடந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சின்ன திரை தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

வயதை வெல்லும் வாலிபர்கள்

தொல் வழிபாடுகளும் விந்தை சடங்குகளும்

இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி

விலாயத் புத்தா

SCROLL FOR NEXT