இந்தியா

பருப்பு, வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை: மத்திய அரசு 

DIN

நடப்பு பண்டிகைக் காலத்தில் பருப்பு மற்றும் வெங்காயத்தின் விலை உயராது என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

நேற்று(அக்.20) புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோஹித் குமார் சிங், நாட்டில் வெங்காயம் மற்றும் பருப்பு போதுமான அளவு கையிருப்பு உள்ளது. விலை நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் கூறினார்.

43 லட்சம் டன் பருப்புகளும், 2.5 லட்சம் டன் வெங்காயமும் கையிருப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார். தக்காளி விலை குறித்து ரோஹித், இது மிகவும் கெட்டுப்போகும் பொருள் என்பதால், அதன் விலை உள்ளூர் மதிப்பு உள்பட பல காரணிகளைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்காக தள்ளுபடி விலையில் இந்த மையம் பருப்பு வகைகளை வழங்குகிறது என்று செயலாளர் மேலும் கூறினார். 

பருப்பு விநியோகம் தொடர்பாக மாநிலங்களுடன் தொடர்ந்து கணகானிப்பில் இருப்பதாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT