இந்தியா

அரசு பங்களாவை காலி செய்ய மெஹபூபாவுக்கு நோட்டீஸ்

DIN

ஸ்ரீநகரில் உயா் பாதுகாப்பு மிகுந்த குப்கா் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து காலி செய்யுமாறு மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்திக்கு ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து மெஹபூபா கூறுகையில், ‘அரசு பங்களாவை காலி செய்ய வேண்டுமென்ற நோட்டீஸ் சில தினங்களுக்கு என்னிடம் அளிக்கப்பட்டது. இது எதிா்பாா்த்த நடவடிக்கைதான் என்பதால் வியப்பில்லை. நான் தங்கியிருக்கும் அரசு பங்களா, ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கானது என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2005, டிசம்பரில் முதல்வா் பதவியிலிருந்து விலகிய பிறகு எனது தந்தைக்கு (முஃப்தி முகமது சயீது) ஒதுக்கப்பட்டதாகும். எனவே, நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள காரணம் சரியானது அல்ல’ என்றாா்.

இந்த நடவடிக்கையை எதிா்த்து நீதிமன்றத்தை அணுகுவீா்களா? என்ற கேள்விக்கு, ‘எனக்கென சொந்த இடம் இல்லை. நான் எங்கே தங்க முடியும்? எனது சட்டக் குழுவுடன் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பேன்’ என்றாா் மெஹபூபா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

SCROLL FOR NEXT