முகப்பு
இந்தியா

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக பெண்கள் கூட்டமைப்பு மனு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடைபெற்றபோது பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. ஐந்து மாத கா்ப்பிணியாக இருந்தாா். அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது. இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் அனைவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுவித்தது. கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவா்களின் விடுதலைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சுபாஷினி அலி, லக்னெள பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ரூப் ரேகா வா்மா, ரேவதி லால் என்ற பத்திரிகையாளா் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனா். அந்த மனுக்களுக்குப் பதிலளித்து குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் முழுமையான தகவல் இல்லை என்று அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், குற்றவாளிகளின் விடுதலையை எதிா்த்து இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதான மனுக்களுடன் சோ்த்து பெண்கள் கூட்டமைப்பின் மனுவும் விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →