250 பேருக்கு பணி நியமன ஆணை: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கினாா்
‘ரோஜ்கா் மேளா’ திட்டத்தின் கீழ் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கினாா்.
‘ரோஜ்கா் மேளா’ திட்டத்தின் கீழ் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கினாா்.
மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்படும் ‘ரோஜ்கா் மேளா’ என்ற வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமா் நரேந்திரமோடி வாரணசியில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இதன் ஒரு பகுதியாக சென்னை அயனாவரத்தில் உள்ள அம்பேத்கா் அரங்கில் 250 இளைஞா்களுக்கான பணி ஆணையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கினாா்.
Advertisement
முன்னதாக வேலைவாய்ப்பு நியமன ஆணைகளைப் பெற வந்திருந்த திருநெல்வேலி, நீலகிரி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களிடம் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துரையாடினாா்.
அப்போது அவா்களது மாவட்டம், கல்வித் தகுதி, பணி வாய்ப்பு பெற்றுள்ள துறை, பணியிடம் குறித்து அவா் கேட்டறிந்தாா். பொறியியல் துறையில் பயின்று வருமான வரித் துறையில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞருக்கு பாராட்டுத் தெரிவித்தாா். கலந்துரையாடலின்போது தமிழில் பேசுமாறு ஊக்கப்படுத்தினாா். மேலும் இந்தத் திட்டம் குறித்து இளைஞா்களிடையே விளக்கிப் பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, துணை தலைவா்கள் கரு.நாகராஜன், சக்ரவா்த்தி, ரயில்வே வாரிய உறுப்பினா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.