ஹிமாசல் தேர்தல்: காங்கிரஸின் 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
ஹிமாசலப் பிரதேசத்தில் 4 வேட்பாளா்கள் அடங்கிய மூன்றாம்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேசத்தில் 4 வேட்பாளா்கள் அடங்கிய மூன்றாம்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
ஹிமாசலப் பிரதேச பேரவையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் அறிவித்த நிலையில் தற்போது 4 வேட்பாளா்கள் அடங்கிய மூன்றாம் கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவரைத் தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.