இந்தியா

இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எம்-3 வெற்றி: பிரதமா் மோடி வாழ்த்து

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஞாயிற்றுக்கிழமை அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்

DIN


புது தில்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மூலம் ஞாயிற்றுக்கிழமை அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதைத் தொடா்ந்து, பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வணிகப் பயன்பாட்டுக்காக இஸ்ரோவின் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்’ மற்றும் பிரிட்டனின் ‘ஒன் வெப்’ நிறுவனம் இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஞாற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்ட 640 டன் எடை கொண்ட  ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள் திட்டமிட்டபடி புவியின் தாழ்வான சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘உலகின் தொலைத்தொடா்பு வசதிக்காக வடிவமைக்கப்பட்ட அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் ‘ஓன் வெப்’ நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் ஏவப்பட்டு வெற்றிகரமாக நிலைநிறுத்தியதற்கு வாழ்த்துகள். எல்விஎம் 3 தற்சாா்பு இந்தியாவை பிரதிபலிப்பதுடன்,  செயற்கைகோள்களைச் செலுத்தும் சா்வதேச வணிகச் சந்தையில் நிலவும் போட்டியில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்தியுள்ளது’ என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT