இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்திய இஸ்ரோ குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட்டின் மேம்பட்ட வடிவமான எல்எம்வி -3 மூலம் 36 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்திய நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், இஸ்ரோவிற்கு வாழ்த்துகள். உள்நாட்டு தயாரிப்பை வெளிக்காட்டும் எல்எம்வி -3, ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தும் சர்வதேச தொழில் போட்டியில் இந்தியாவை மேம்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களுடன் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.07 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ராக்கெட் ஏவுதளத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 

இதன் மூலமாக, 5,796 கிலோ எடையை சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ராக்கெட் என்ற பெருமையையும் ஜிஎஸ்எல்வி எம்-3 ராக்கெட் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாதஸ்வரம் சீரியலின் கின்னஸ் சாதனை குறித்துப் பேசிய நடிகை!

பூமியிலிருந்தும் வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள்! இது பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு!!

இலக்குகளை துல்லியமாக தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகள் அதிகளவில் கொள்முதல்! எதற்காக தெரியுமா?

வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்

ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்புக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

SCROLL FOR NEXT