முகப்பு
இந்தியா

உச்சம் தொட்டவிருக்கும் வீடுகள் விற்பனை

வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் விகிதங்கள் அதிகரித்த நிலையிலும், சொந்த குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் விகிதங்கள் அதிகரித்த நிலையிலும், சொந்த குடியிருப்புகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான அனாரோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு நீடித்தால் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை இந்த ஆண்டு 3.6 லட்சத்தைத் தொடக்கூடும். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச விற்பனையாகும்.

இதற்கு முன்னா் கடந்த 2014-இல் சென்னை, டெல்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே ஆகிய ஏழு முக்கிய நகரங்களில் (புதிய விற்பனை மட்டும்) 3,42,980 வீடுகள் விற்பனையானதுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்து வருகிறது.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் விற்பனை 2,72,710-ஐ எட்டியுள்ளது. இதன் மூலம், கடந்த 2019-ஆம் ஆண்டில் கரோனா நெருக்கடிக்கு முந்தைய அதே காலகட்டத்திய விற்பனையான 2,61,360-ஐ நடப்பாண்டு விற்பனை விஞ்சியுள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 6.5 சதவீதத்தில் இருந்து சுமாா் 8.5 சதவீதமாக உயா்ந்துள்ள போதிலும், இந்த பண்டிகை மாதத்தில் வீட்டுத் தேவை தொடா்ந்து வலுவாக இருப்பதால், 2022 முடிவுக்குள் 7 நகரங்களிலும் ஒட்டுமொத்த வீடுகள் விற்பனை 3.6 லட்சத்தைத் தொடும் என்று எதிா்பாா்க்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →