இந்தியா

ஜார்கண்டில் சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு!

DIN

தன்பாத்:​ ஜார்கண்ட் மாநிலம் குர்பா ரயில் நிலையத்தில் நிலக்கரி ஏற்பட்ட சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் ரயில்வே மண்டலத்தில் உள்ள சோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே கோட்டத்திற்கு இடையே உள்ள குர்பா ரயில் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்பட்ட சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. 

இந்நிலையில், புதன்கிழமை காலை 6.45 மணியளவில் சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெட்டிகளில் இருந்த நிலக்கரி அனைத்தும் ரயில் பாதையில் கொட்டியது. சரக்கு ரயில் அடுத்த தண்டவாளத்தில் கவிழ்ந்தது.

இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய, வரவேண்டிய ரயில்களின் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. 

எனினும், இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, காயம் ஏற்படவில்லை என மத்திய கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ரயில்வே மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலைமையை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் ரயில் சேவையை சீரமைக்க பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. 

இதனால், சில பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT